ஒரு நாளைக்கு 48 முறையா? சந்தானம் பற்றி ஷாக்கிங் தகவலை வெளியிட்ட இயக்குனர்!

Published : May 30, 2020, 05:15 PM IST
ஒரு நாளைக்கு 48  முறையா? சந்தானம் பற்றி ஷாக்கிங் தகவலை வெளியிட்ட இயக்குனர்!

சுருக்கம்

எழுத்தாளரும் புதுமுக இயக்குநருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. நடிகர் சந்தானத்துடன்,  சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

எழுத்தாளரும் புதுமுக இயக்குநருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. நடிகர் சந்தானத்துடன்,  சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கியுள்ளது. இது எல்லாம் போதாது என்று அனகா, ஷிரின் என்ற இரண்டு ஹீரோயின்கள் வேறு சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளனர். 

இந்த படத்தில் சந்தானம் நடித்த 3 லூக்கின் போஸ்டர்களை, படக்குழுவு அண்மையில் வெளியிட்டனர். ஹீரோ, வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் என மூன்று கதாப்பாத்திரத்தில் மாறி மாறி நடித்து அசத்தியிருந்தார் சந்தானம்.  

இந்நிலையில் இந்த மூன்று வேடங்களைப் பற்றி, இயக்குனர் கார்த்திக் யோகி இணையதள பத்திரிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்தில் “சந்தானம் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பையனாகவும், ஒரு விளையாட்டு வீரராக நடிக்கிறார்... மூன்றாவது கதாபாத்திரம் கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் இப்படம்  மூன்று தனித்துவமான பாத்திரங்களைக் கொண்டிருப்பதால் படப்பிடிப்பும் மிகவும் சவாலாகவே இருந்தது. ஒவ்வொரு தோற்றத்திலும் மாறி மாறி நடித்தார் சந்தானம்.  ஒரு நாளில் சுமார் 48 முறை தனது கெட்-அப்பை மாற்றினார். இது சோர்வாக இருந்தாலும், சந்தனம் பொறுப்பை விளையாட்டாக ஏற்றுக்கொண்டார். ”

அறிவியல் புனைகதை, பொழுதுபோக்கு என மிகவும் காமெடியாக இந்தப்படம் நகரும். நடிகர் யோகி பாபு விஞ்ஞானியாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். சந்தனம் மற்றும் யோகி பாபுவின் கதாபாத்திரங்கள் கதைக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் சமூக இடைவெளியோடு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை பலூன் படத்தை தயாரித்த சினிஷ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!