
நடிகை பூஜா ஹெக்டேவின் ரசிகர்களும், சமந்தாவின் ரசிகர்களும் மாறி மாறி, வார்த்தைகளால் தாக்கி கொண்டு, சமூக வலைத்தளத்தில் முட்டி மோதி வருவது, திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என போட்டிருந்த பதிவை பார்த்து தான் தற்போது சமந்தாவின் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
பின் இது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்தார். சில தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியுடன் அதை மீட்டடெடுத்த பின் இப்படி போடப்பட்ட பதிவுகளையும் நீக்கினார்.
ஆனால் சமந்தா ரசிகர்கள் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என ட்விட்டரில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
எனவே சென்ற வருடம் சமந்தா நடித்த 'ஓ பேபி' படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவினை போட்டிருந்தார். அதற்கு கமெண்டில் சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சித்து பேசினார். பின் அந்த பதிவை நீக்கி விட்டனர்.
இந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலாகி, நடிகை பூஜா ஹெக்டேவை பற்றி சமந்தா,சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது எந்த விதத்தில் நியாயம் என, பூஜாவின் ரசிகர்களும் சமந்தா ரசிகர்களிடம் சண்டை போட்டு வருகிறார்கள்.
பொதுவாக, விஜய் அஜித் ரசிகர்கள் மத்தியில் தான் அதிக சண்டைகள் வந்து ஓய்வது வழக்கம். மாறாக நடிகை பூஜாவின் ரசிகர்களுக்கும் சமந்தாவின் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டை போட்டு கொள்ளவது திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.