
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக, தன்னை அறிமுக படுத்தி கொண்டு, தற்போது நடிகராக மாறி வெள்ளித்திரையில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ரியோ ராஜ், இதுவரை குழந்தை பிறந்ததில் இருந்து, குழந்தை பற்றிய எந்த புகைப்படத்தையும் வெளியிடாத நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் அனைவருக்குமே, சரியான பட வாய்ப்புகள் எளிதில் அமைந்து விடுவது இல்லை. ஆனால் அந்த அதிர்ஷ்டம், நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்தது. இவரை தொடர்ந்து மா.கா.பா, ரக்ஷன், ரியோராஜ் ஆகியோர் வெள்ளித்திரையில் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
கடந்த வருடம், சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகன் அவதாரமெடுத்தார் ரியோ. இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இவர் பத்ரி இயக்கத்தில் ப்ளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரியோ ராஜ் மனைவி ஸ்ருதி, கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை, தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த இவர், முதல் முறையாக... தொட்டில் குழந்தை படுத்திக்கும் போது... பாதங்கள் மட்டும் தெரியும் படி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து இவருடைய ரசிகர்கள், விரைவில் குழந்தை முகத்தையும் வெளியிட வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.