நடிகர் முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டேன்! அப்பா என்னை மன்னிச்சுடுங்க கதறிய ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியா!

Published : Feb 01, 2024, 12:22 PM ISTUpdated : Feb 01, 2024, 12:33 PM IST
நடிகர் முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டேன்! அப்பா என்னை மன்னிச்சுடுங்க கதறிய ராஜ்கிரண் மகள்  ஜீனத் பிரியா!

சுருக்கம்

நாதஸ்வரம் சீரியல் நடிகர் முனிஷ் ராஜாவை காதலித்து, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கரம் பிடித்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டதாக கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பழம்பெரும் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான ஜீனத் ப்ரியா, கடந்த 2022-ஆம் ஆண்டு நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமானவர் முனிஷ் ராஜாவை காதலித்து குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். 

பேஸ்புக் மூலம் இருவரும் பழக துவங்கிய நிலையில், ஆரம்பத்தில் நட்பாக இருந்த இருந்த உருவு பின்னர் காதலாக மாறியது. முனிஷ் ராஜா குடும்பத்தில் இவர்கள் இருவரின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய நிலையில், ராஜ்கிரண்... முனிஷ் ராஜா பற்றி விசாரித்த போது மகளை திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு மனநிறைவு இல்லாததால், இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. எனவே தன்னுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விதத்தில், வீட்டை விட்டு வெளியேறிய ஜீனத் பிரியா... வளர்ப்பு தந்தையான ராஜ்கிரண் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

Atlee Son Birthday: மகனின் முதல் பிறந்தநாளை பாரிஸில்... ஸ்பெஷலான இடத்தில் கொண்டாடிய அட்லீ - பிரியா ! போட்டோஸ்

ஒரு கட்டத்தில், மகளின் திருமண செய்தி குறித்து நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கையில்... "தனக்கு நைனார் முகம்மது என்கிற மகன் மட்டுமே இருப்பதாகவும், அவரைத்தவிர வேறு எதுவும் பிள்ளைகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜீனத் பிரியா தனக்கு பிறந்த மகள் இல்லை என்றும், அவர் தனது வளர்ப்பு மகள் என்றும் கூறினார். இனி அவருக்கும் எனது குடும்பத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அதில் குறிப்பிட்டிருந்தார்.

நயன்தாரா ட்ரெஸ்ஸிங் ஸ்டைலை அட்ட காப்பி அடித்த கீர்த்தி சுரேஷ்! மஞ்சள் சேலையில் மனம் மயக்கும் போட்டோஸ்!

அதுமட்டுமின்றி ஜீனத் பிரியா திருமணம் செய்துகொண்ட முனிஷ் ராஜா, மகா மட்டமான புத்தி கொண்டவர், அவர் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனம் கொண்டவர் எனவும் சாடிய ராஜ்கிரண், சினிமாவில் தனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி வாய்ப்பு தேடுவதற்காகவே அவர் இவ்வாறு செய்து உள்ளதாக அந்த அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார். இதுபற்றி எவ்வளவோ எடுத்து கூறியும் ஜீனத் பிரியா முனிஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்ட நிலையில்... தற்போது காதல் கணவரை ஓரே வருடத்தில் பிரிந்து விட்டதாக கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kilambakkam Bus stand | கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறை-நிறைகள் என்னென்ன? - மக்கள் கருத்து

அந்த வீடியோவில், "எல்லோருக்கும் வணக்கம் நான் பிரியா... ராஜ்கிரண் சாரின் வளர்ப்பு மகள். நான் 2022-ல் நடிகர் முனிஷ் ராஜாவை திருமணம் செய்தேன். அது மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த கல்யாணத்துக்கு அப்பறம்... இப்போது பிரிந்துவிட்டோம். பிரிந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. இது சட்ட பூர்வமான திருமணம் கிடையாது. இந்த திருமணத்திற்காக என் அப்பாவை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டேன். நான் இவ்வளவு செய்த போதும் கூட, எனக்கு ஒரு பிரச்னை என வந்த போது என் தந்தை சத்தியமாக வந்து உதவினார். இது நான் எதிர்பாராத கருணை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என கண்ணீருடன் கதறியுள்ளார் பிரியா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!