நடிகர் ராஜேஷின் மகனும் நடிகரா? அவரின் குடும்ப பின்னணி பற்றி தெரியுமா?

Published : May 29, 2025, 09:12 PM ISTUpdated : May 29, 2025, 09:58 PM IST
actor rajesh family

சுருக்கம்

பிரபல நடிகர் ராஜேஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், பல்வேறு தரப்பட்ட வேடங்களில் ரசிகர்களை கவர்ந்தவர்.

Actor Rajesh Family : பிரபல நடிகர் ராஜேஷ், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியுசி, பச்சையப்பாஸ் கல்லூரியில் படித்தவர், திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லட் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கன்னிப் பருவத்திலே படத்தின் மூலம் திரைப்படத்தில் நடக்க தொடங்கிய அவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய பாத்திரங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். 

ரசிகர்களை கவர்ந்த நடிகர் ராஜேஷ்

ஹீரோ முதல் குணச்சித்திர வேடங்கள் வரை தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் காமராஜ் என்ற கதாபாத்திரத்தில் ஆசிரியராக நடித்திருப்பார். அனைவரையும் ரசிக்க வைத்த கதாப்பாத்திரமாக அந்த வேடம் அமைந்திருக்கும். தமிழின் மீது அதிகமான ஆர்வம் உள்ள நடிகர் ராஜேஷின் தமிழ் உச்சரிப்பு அருமையாக இருக்கும். இந்த நிலையில் திடீர் ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலமானார். ராஜேஷ்க்கு 1983 ஆம் ஆண்டு சில்வியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கு திவ்யா மற்றும் தீபக் என்ற இரண்டு உள்ளது. ராஜேஷின் மனைவி சில்வியா கடந்த 2011ஆம் ஆண்டு இறந்துள்ளார். 

கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ராஜேஸ் மகன் 

நடிகர் ராஜேஷ் மகன் தீபக் 2014 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். 35 வயதாகும் ராஜேஷின் மகன் தீபக் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என போராடி வருகிறார். அவர் நடித்த படத்தையும் திரைக்கு கொண்டுவர முடியாத நிலையில் தனது அப்பாவுக்கு மட்டும் போட்டுக் காட்டியதாகவும் வேதனையோடு தீபக் தெரிவித்தார். மேலும்  அடுத்த வாரம் தன்னுடைய நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், தனது தந்தை இறந்ததை நினைத்து பரிதவித்து வருகிறார்.  மறைந்த பிரபல இயக்குநரான மகேந்திரனின் உறவினர் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?