’விக்ரம் சொல்லைத் தட்டமுடியாமல் மீண்டும் நடிக்க வந்தேன்’...பிரபல நடிகர் சொல்லும் சீக்ரெட்...

Published : Nov 13, 2019, 03:21 PM IST
’விக்ரம் சொல்லைத் தட்டமுடியாமல் மீண்டும் நடிக்க வந்தேன்’...பிரபல நடிகர் சொல்லும் சீக்ரெட்...

சுருக்கம்

1981ம் ஆண்டு வெளியான ‘பாக்கு வெத்திலை’படத்தின் மூலம் அறிமுகமான ராஜா, பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள்’ரிலீஸுக்குப் பின்னர் பரவலாக அறியப்பட்ட நடிகரானார்.அடுத்து வேதம் புதிது, மாப்பிள்ளை, புது வசந்தம், வா அருகில் வா, கருத்தம்மா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அருணாசலம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரமாக தோன்றி தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியவர் ராஜா. அடுத்து பட வாய்ப்புகள் குறைந்ததால் திரையுலகை விட்டு ஒதுங்கிக்கொண்டார்.

இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் ரிடையர் ஆன பலபேர் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் 18 ஆண்டுகள் கேப் விட்டிருந்த ‘கடலோரக் கவிதைகள்’ராஜா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இன்னும் இரு வாரங்களில் ரிலீஸாகவிருக்கும் துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மாவில் அவர் துருவின் அப்பாவாக நடித்திருக்கிறார்.

1981ம் ஆண்டு வெளியான ‘பாக்கு வெத்திலை’படத்தின் மூலம் அறிமுகமான ராஜா, பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள்’ரிலீஸுக்குப் பின்னர் பரவலாக அறியப்பட்ட நடிகரானார்.அடுத்து வேதம் புதிது, மாப்பிள்ளை, புது வசந்தம், வா அருகில் வா, கருத்தம்மா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அருணாசலம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரமாக தோன்றி தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியவர் ராஜா. அடுத்து பட வாய்ப்புகள் குறைந்ததால் திரையுலகை விட்டு ஒதுங்கிக்கொண்டார்.

தற்போது 18 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நவம்பர் 21ம் தேதி ரிலீஸாகவுள்ள துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’வில் அவருக்கு அப்பாவாக நடித்துள்ளார். அதுகுறித்துப் பேசிய அவர், இடையில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் என்னுடைய மார்பிள்ஸ் தொழிலில் கவனம் செலுத்தி வந்தேன். திடீரென ஒரு நாள் நடிகர் விக்ரமிடமிருந்து போன். ‘ஆதித்ய வர்மா’படம் குறித்து சொல்லி, துருவுக்கு அப்பாவாக நீங்கதான் நடிக்க வேண்டும் என்றார். விக்ரம் எப்போதுமே எனக்கு நம்பிக்கை தரும் ஒரு நண்பர். அவர் பேச்சைத் தட்டமுடியாமல் நடித்தேன்’என்கிறார் ராஜா. ‘கடலோரக் கவிதைகள்’ராஜா இனி ஆதித்ய வர்மா ராஜா என்று காத்திருந்து பார்ப்போம்.
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!