
பிரபல நடிகர் ரகுமானின் தாய் சாவித்திரி நாயர் வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3 :30 மணிக்கு பெங்களூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு வயது 84 .
நடிகர் ரகுமான் தாயாரின் இறுதிச் சடங்குகள் இன்று (வியாழக்கிழமை) காலை கேரளா, மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் நடக்கும் என தெறிக்கப்பட்டுள்ளது. இவரது தந்தை கே. முகமது அப்துல் ரஹ்மான் கடந்த டிசம்பர் 2018 -ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1983 ஆம் ஆண்டு மலையாள சினிமாவின் மூலம், தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க துவங்கினார். மேலும் இவர் தமிழில் நடித்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான, புது புது அர்த்தங்கல், சங்கம், ராம், பில்லா, சிங்கம் II, 36 வயதினிலே, போன்றவை சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களாகும்.
தற்போது ஜெயம் ரவியின் ஜன கண மன, விஷாலுடன் துப்பறிவாளன் 2 மணி ரத்னத்தின் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிய மல்டி ஸ்டாரர் வரலாற்று படமான 'பொன்னியன் செல்வன்' ஆகிய படைகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவரது தாயின் இழப்பு நடிகர் ரஹ்மானுக்கு ஈடு இணையில்லா இழப்பாகும். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இவரது தாயார் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.