எனக்கு அரசியல் தெரியாது..! 2006 -ல் நடந்த உண்மையை கூறி... ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ராகவா லாரன்ஸ்!

Published : Jan 23, 2020, 07:26 PM IST
எனக்கு அரசியல் தெரியாது..! 2006 -ல் நடந்த உண்மையை கூறி... ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ராகவா லாரன்ஸ்!

சுருக்கம்

கடந்த வாரம்... பெரியார் ராமர், சீதை உருவங்களை நிர்வாணப்படுத்தி செருப்பால் அடித்ததாக ரஜினி பேசியது சர்ச்சையானது. அதற்காக ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பெரியாரிஸ்டுகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இல்லாததை தான் பேசவில்லை மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக அறிவித்தார்.   

கடந்த வாரம்... பெரியார் ராமர், சீதை உருவங்களை நிர்வாணப்படுத்தி செருப்பால் அடித்ததாக ரஜினி பேசியது சர்ச்சையானது. அதற்காக ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பெரியாரிஸ்டுகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இல்லாததை தான் பேசவில்லை மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக அறிவித்தார். 

ஒருதரப்பினர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்... பெரியாரிஸ்ட்டை சேர்ந்த பலர், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ்... அதிரடியாக ட்விட் ஒன்றை போட்டு, ரஜினிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது.... 

அனைவருக்கும் வணக்கம்:

எனக்கு அரசியல் தெரியாது, ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரை பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்!  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பொருத்தவரை, யார் மனதையும் நோகும்படி பேசக்கூடியவர் அல்ல!  ஏன் அவரை திட்டுபவர்கள் கூட பதிலுக்கு திருப்தி திட்டாத பண்பாளர்!

எதையும் பிளான் செய்தோ திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல. ஆனால் பெரியாரை பற்றி அவதூறாக பேசி விட்டதாக கூறுகின்றனர். அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் பெரியாரின் தீவிர தொண்டரான இயக்குனர் வேலு பிரபாகரன் அவர்கள் பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்த போது, வேலு பிரபாகரனே...  எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி உதவி செய்ய வேண்டும்.

பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் தான் திரு.சூப்பர் ஸ்டார். ரஜினி சாரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம். என அவரது மனம் அறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் ராகவா லாரன்ஸ் என 2006  ஆண்டு நடத்த உண்மையை கூறி விமர்சகர்களுக்கு ட்விட் செய்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!