10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ராகவா லாரன்சுடன் இணையும் பிரபல ஹீரோ..!

Published : Feb 05, 2021, 12:25 PM IST
10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ராகவா லாரன்சுடன் இணையும் பிரபல ஹீரோ..!

சுருக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள 'ருத்ரன்' படத்தில் படத்தில், பிரபல ஹீரோ 10 வருடங்களுக்கு பின் மீண்டும் இவருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை படக்குழுவினர் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.  

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள 'ருத்ரன்' படத்தில் படத்தில், பிரபல ஹீரோ 10 வருடங்களுக்கு பின் மீண்டும் இவருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை படக்குழுவினர் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸை, வைத்து “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் பூஜையுடன் பிரமாண்டமாக துவங்கியது. இப்படத்தை, K.P.திருமாறன் கதை, திரைக்கதை எழுத “ருத்ரன்” படத்தை கதிரேசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்தில், நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில், இணைந்துள்ள பிரபல ஹீரோ குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு, ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த 'காஞ்சனா' படத்தில் திருநங்கையாக நடித்த, சரத்குமார் தற்போது 'ருத்ரன்' படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த தகவலை படக்குழு தற்போது அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி