நடிகர் ரகுவரனின் மறைக்கப்பட்ட மறுமுகம்....? ரோகினி வெளியிட்ட ரகசியம்...!

 
Published : Mar 15, 2018, 07:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
நடிகர் ரகுவரனின் மறைக்கப்பட்ட மறுமுகம்....? ரோகினி வெளியிட்ட ரகசியம்...!

சுருக்கம்

actor raguvan music talent reveal wife rohini

நடிகர் ரகுவரன் என்றதும் முதலில் நம் நினைவிற்க்கு வருவது... தனித்துவமான குரல், பேச்சு, 6அடி உயரம், ஒல்லியான தோற்றம் என காட்சியளித்த அவரின் கம்பீரமான முகம் தான். நடிப்பில் ஹீரோக்களுக்கு நிகராக குணசித்திர வேடத்தில் நடித்து அசத்தியவர் இவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 

பொதுவாக வில்லன் என்றால் வாட்டம் சாட்டமாக இருக்க வேண்டும். பார்ப்பவர் பயம் கொள்ளும் தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதை முற்றிலும் தவிடு பொடியாக்கியவர் நடிகர் ரகுவரன்.

 

இவர் ரஜினிக்கு சமான கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்த 'பாட்ஷா' படம் இவருடைய நடிப்பில் மையில் கல் என கூறலாம் . வில்லன் கதாப்பாத்திரத்தையும் தாண்டி ரோஜாகூட்டம், யாரடி நீ மோகினி ஆகிய படங்களில் ஹீரோக்களுக்கு அப்பாவாகவும் நடித்தவர். 

பிரபல நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். திரையுலகில் பிஸியான நடிகராக இருந்த போதே திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

தமிழில் இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ரகுவரனின் நடிப்பின் சாதனைகள் சொல்லில் அடங்காதவை. இவர் வில்லனாக பல படங்களில் நடித்தாலும் மிகவும் நல்ல மனிதர் என்பது திரைத்துறையில் இவருடன் பயணித்து பலருக்கும் தெரியும். 

இவரை பற்றி இதுவரை வெளிவராத தகவலை வெளியிட்டுள்ளார் இவருடைய மனைவி ரோகினி. இது குறித்து அவர் கூறுகையில்... ரகுவரன் முதலில் சினிமாவிற்கு வந்தது நடிப்பதற்காக இல்லையாம், பெரிய இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று தானாம்.

சென்னை வந்து சில நாள் இதற்கு பயிற்சி எடுத்தது மட்டுமின்றி, இளையராஜாவிடம் கிட்டார் வாசித்துள்ளாராம்.

எதர்ச்சியாக நடிக்க துவங்கிய இவர் மிகப்பெரிய நடிகராக மாறினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார் இதனால் இவருடைய இளையமைப்பாளர் கனவு நிறைவேறாமலே போய் விட்டது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!
லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....