
ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் “ 'உளிரி'. இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி அறிமுகமாகிறார் மற்றும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில்...
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த “ உளிரி “ எனும் மீன் இனமே இன்று அழிக்கப் பட்டு விட்டது...அதுமட்டுமல்லாமல் எனது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப் பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.
நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த உளிரி என்று தெரிவித்துள்ளார் இயக்குனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தகது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.