ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பில் நடிக்கிறார் நடிகர் பிரஷாந்த்...

 
Published : Jun 17, 2017, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பில் நடிக்கிறார் நடிகர் பிரஷாந்த்...

சுருக்கம்

actor prashanth acting rajini title

விஜய், அஜித்துக்கு நிகராக ஒரு காலத்தில் வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் பிரஷாந்த். இவர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சில நாட்கள் திரையுலகத்தை விட்டு விலகியே இருந்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் சாகசம் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படம் பெரிதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறாததால் நல்ல கதைக்காக காத்திருந்தார்.

தற்போது இயக்குனர் ஜீவாஷங்கரின் உதவியாளர் வெற்றிச்செலவன் இயக்கவுள்ள முதல் படத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஆன "ஜானி" படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த தலைப்பு முறையான அனுமதியோடு பெற பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரஷாந்திற்கு ஜோடியாக அனன்யா சோனி என்பவர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து பிரஷாந்த், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்த "நான்" படத்தின் ஹிந்தி ரீ மேக்கிலும்  நடிப்பதாக கூறப்படுகிறது. அதே போல இவருடைய தந்தை தயாரிக்கும் குயின் படத்தின் தமிழ் ரீ மேக்கில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!