கொரோனாவால் வீட்டு வேலையாட்களுக்கு 3 மாத சம்பளத்தை முன் கூட்டியே கொடுத்த பிரபல நடிகர்..!

Published : Mar 26, 2020, 01:49 PM ISTUpdated : Mar 26, 2020, 02:58 PM IST
கொரோனாவால் வீட்டு வேலையாட்களுக்கு  3 மாத சம்பளத்தை முன் கூட்டியே கொடுத்த பிரபல நடிகர்..!

சுருக்கம்

வீட்டில் வேலை செய்பவர்கள், எனது உதவியாளர்கள் ஆகிய அத்தனை பணியாளர்களுக்கும் மே மாதம் வரை சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன். 

உலகையே உலுக்கியெடுத்து வரும் கொரோனாவால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. 

இதனால் மக்கள், வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பணியாளர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’நான் சேர்த்து வைத்துள்ள பணத்தை பார்த்தேன் எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டில் வேலை செய்பவர்கள், எனது உதவியாளர்கள் ஆகிய அத்தனை பணியாளர்களுக்கும் மே மாதம் வரை சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன். தற்போதைய சூழ்நிலையில் நின்று போன எனது மூன்று படங்களிலும் வேலை பற்றி தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தது பாதி சம்பளத்தை வழங்க முயற்சி செய்வேன்.

என்னால் முடிந்தவரை மேலும் உதவிகள் செய்வேன். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு முடிந்த உதவி தொகையை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் திரும்பி கொடுக்க வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக இருப்போம்’’ என அவர் கூறியுள்ளார் இன்று பிறந்தநாள் காணும் பிரகாஷ்ராஜின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!