நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டி ….. நடிகர் பிரகாஷ் ராஜ் அதிரடி அறிவிப்பு …

Published : Jan 01, 2019, 10:16 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டி ….. நடிகர் பிரகாஷ் ராஜ்  அதிரடி அறிவிப்பு …

சுருக்கம்

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத்  தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக நகைர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பு மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர். அதுவும் அண்மைக்காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியுடன் இணைந்து  கர்நாடகா மாநிலமம் முழுவதும் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டார்,

இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் கூட வந்தன. இதே போல் கர்நாடக மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு  கடும் கண்டனம் தெரிவித்ததோடு , அந்த கொலைக்கு காரணம் இந்த அமைப்புகள் தான் ஓபனாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள  நடிகர் பிரகாஷ் ராஜ் , உங்கள் ஆதரவுடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், இது குறித்த தகவல்களை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!