நடிகர் பிரபாஸ் ராமராக நடித்துள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், அவரின் தீவிர ரசிகர்கள் இப்படத்தை ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளனர். குறிப்பாக ஒரு ரசிகர், பிரபாஸின் போஸ்டர் முன்பு கையை அறுத்துக் கொண்டு, அந்த போஸ்டரில் ரத்தத்தை தடவிய வீடியோ வெளியாகி, ரசிகர்களின் கண்டங்களுக்கு ஆளாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் பிரபாஸ். இவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடித்திருந்த 'பாகுபலி' திரைப்படம், பிரபாஸை உலக அளவில் கவனிக்க செய்தது. இந்தப் படத்தை தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சாஹோ' மற்றும் 'ராதே ஷியாம்' ஆகிய படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான போதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
எனவே வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் பிரபாஸ், தற்போது புராணக் கதையான ராமாயணத்தை மையமாகக் கொண்டு, இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். சீதாவாக கீர்த்தி சனோன் நடிக்க, இராவணன் வேடத்தில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார்.
ஆத்தாடி... டாட்டூ குத்துற இடமா அது? ஓப்பனாக காட்டி ரசிகர்களை மனதை ரணகளமாக்கிய அனுபமா பரமேஸ்வரன்!
சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி உள்ளது. ஏற்கனவே இப்படம் குறித்த போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர், டீசர், ஆகியவை வெளியான போது... VFX காட்சிகள் அதிருப்தியை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறிவந்த ரசிகர்கள், தற்போது படத்தைப் பார்த்துவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒரு தரப்பு ரசிகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், மற்றொரு தரப்பு ரசிகர்கள் VFX காட்சிகள் மட்டுமே, எதிர்பார்த்த விதத்தில் இல்லை என்றும் மற்றபடி படம் விறுவிறுப்பாகவும், ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதாகவும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற மொழிகளை ரசிகர்களை விட, தெலுங்கு ரசிகர்கள் இப்படத்தை இன்று காலை முதலே பிரம்மாண்ட திருவிழாவை போல் கொண்டாடி வரவேற்று வரும் நிலையில், பிரபாஸின் வெறித்தனமான ரசிகர் ஒருவர்... பிரபாஸின் ஆதிபுருஷ் பட போஸ்டர் முன்பு பீர் பாட்டிலால் தன்னுடைய கைகளை கிழித்துக்கொண்டு அட்டகாசம் செய்ததோடு மட்டும் இன்றி, போஸ்டருக்கு அபிஷேகம் செய்வது போல் ரத்தத்தை தடவுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி, பலரது கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.
அந்த வீடியோ இதோ...
Offline cult fans 🥵🔥
Beer bottle cheyyi koskunnadu 🙏🏼 pic.twitter.com/FZl3PfAww1