தமிழ் சினிமா முடிவுக்கு எதிராக பேசிய பவன் கல்யாண்! வேடிக்கை பார்த்த சமுத்திரக்கனி! வச்சு செய்த ப்ளூசட்டை மாறன்

By manimegalai a  |  First Published Jul 26, 2023, 5:26 PM IST

தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், தமிழ் சினிமா முடிவுக்கு எதிராக பட விழாவில் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இயக்குனரும், நடிகருமான தம்பிராமையா நடித்த 'வினோதய சித்தம்' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்...  தற்போது இந்த படத்தை 'ப்ரோ' என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் சமுத்திரக்கனி.  இந்த படத்தில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க, தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடித்துள்ளார். ஜூலை 28ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் பவன் கல்யாண், சாய்தேஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பட விழாவில் பேசிய பவன் கல்யாண், தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு திரையுலகம் இன்று வளர்ச்சி அடைந்ததாக இருக்க காரணம், இங்கிருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக்கொண்டது தான் காரணம். எல்லா மொழி மக்களும் ஒன்றாக இருக்கும் போது தான் அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டுமே வேலை கொடுக்க வேண்டும் என யோசிப்பது நம்மை நாமே குறுகிய மனப்பான்மைக்குள் வைத்துக் கொள்ளும் தன்மை என பேசினார்.

Tap to resize

Latest Videos

சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக... எதிர்நீச்சல் தொடரில் ஹிஜாப்புடன் நடிக்கும் முஸ்லிம் நடிகை!

அதேபோல் சமுத்திரகனி குறித்து பேசி அவர், சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தெலுங்கு படங்களை இயக்குகிறார். தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் பல தமிழ் படங்களை தயாரித்துள்ளார் என பேசினார். தமிழ் சினிமா முடிவுக்கு எதிராக பவன் கல்யாண் பேசியுள்ளது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்.. தமிழ்ப் படத்தில் தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒரு புதிய விதியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்க்கு எதிராக தான் இப்படி பேசியுள்ளார் பவன் கல்யாண். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையில் இருந்து, தமிழ் சினிமா வெளியே வந்தால் தான் ஆர் ஆர் ஆர் போன்ற உலக தரம் வாய்ந்த படங்களை, தமிழ் சினிமாவால் தர இயலும் என பவன் கல்யாண் பேசினார்.

கண்ணீரில் மூழ்கிய... குக் வித் கோமாளி பிரபலங்கள்! ஃபைனலில் அப்படி என்ன தான் நடந்தது? வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவின் முடிவுக்கு எதிராக பவன் கல்யாண் பேசியபோது... தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகரும் - இயக்குனருமான சமுத்திரக்கனி கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். எனவே இவரை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வச்சி செய்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், பவன் கல்யாண் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருக்கிறார். இப்பேச்சின் இறுதியில் பகவத்கீதை வாசகத்தை குறிப்பிட்டு பேசினார்.

'கேவலம்.. நம் மொழி, நம் நடிகர்கள் மட்டுமே படத்தில் இருக்க வேண்டுமென நினைப்பது குறுகிய மனப்பான்மை' என்று இவர் தமிழ் திரைத்துறையினரை பற்றி கூறியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

அருகில் இருந்த PAN South Indian நடிகரும், தமிழருமான சமுத்திரக்கனி FEFSI நிலைப்பாட்டை ஆதரித்தோ அல்லது பவன் கூறியது பற்றி எந்த கருத்துமோ கூறாமல் இந்த நிமிடம் வரை மௌனம் காத்து வருகிறார். என தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்களும்,  சினிமாவில் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் சமுத்திரக்கனி இந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாண் கருத்துக்கு எதிர்த்து பேசாதது ஏன்? தமிழ் படங்களில் தமிழக கலைஞர்கள், தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற எண்ணம் குறுகிய மனப்பான்மையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் அக்கட தேசத்தி இருந்து தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய, எம்‌ஜிஆர், ரஜினி, நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்ட பலரை வாழ வைத்தது தமிழ் சினிமா தான் என பதிலடியும் கொடுத்து வருகிறார்கள்.

Pawan Kalyan stirs up controversy against FEFSI Union at the promotional event of his upcoming telugu film 'Bro' directed by Tamil director Samuthirakani.

Few days before, FEFSI came up eith new rules for Tamil movies like.. filmmakers told to employ only Tamil artists, avoid… pic.twitter.com/gAIC7itTR6

— Blue Sattai Maran (@tamiltalkies)

 

click me!