
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது... " நான் தயாரிப்பாளர் ஆனது என் படைப்பின் சுதந்திரத்திற்கே.
இச்சங்கத்தில் இதுவரை நான் கண்டதெல்லாம் சிறிய பலனுக்கு கூட சீரிய முயற்சி எடுக்கப்பட்டது என்னவோ உண்மை. காணாதது, ஊழல் மற்றும் உபதொழிலாய் பதவிகளை பயன்படுத்தி வரும், லஞ்ச லாபம் அடைவது. அதை நான் என்றாவது அறிந்திருந்தால் அன்று பதவி விலகி இருப்பேன்.
நியாயம் கேட்க நீதிமன்றத்தில் பல வாசல்கள் உண்டு முடிவாய் உரிமையை நன்முறையில் நிலைநாட்ட தேர்தல் என்ற ஒன்று மிக அருகில் இருக்கையில் பூட்டுப்போட்டு வன்முறையில் ஈடுபடுவது அநாகரிகமானது என்பதை நான் மட்டுமல்ல நீதிமன்றமும் நீதிமன்றமும் வன்மையாக கண்டித்துள்ளது .
சகலரிடமும் சுமூகமாக நேசக்கரம் நீட்ட நான் வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவன். சங்க பதவி மூலம் அந்த நட்பில் சிறு பிளவு ஏற்படுவதை விரும்பாதவன். எனவே ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போன்ற அரசியல் நமக்குள் இருந்தால் அதைக் கலைத்து ஒற்றுமையை மேம்பட முயற்சிப்போம் தலைமையையும் செயற்குழு உறுப்பினர்களும் என்னை துணைநிலை மதித்து சம்மதித்தேன் இந்த பதவியில் எந்த சுகமும் இல்லை பணிச்சுமை மட்டுமே என்று பார்த்திபன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.