
தனது கிரேசி நாடகக்குழுவின் ஆஸ்தான நடிகர்களுல் ஒருவரான சீனு மோகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பிரபல நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன்.
துவக்கத்தில் கிரேசி மோகனின் நாடகக்குழுவில் முக்கிய நடிகராக இருந்த சீனுமோகன் ‘வருஷம் 16’ படத்தின் மூலம் இயக்குநர் ஃபாசிலால் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தாலும் சீனு மோகனின் ஆர்வம் நாடகங்களில் நடிப்பதிலேயே இருந்தது. கிரேசி மோகனின் முக்கிய நாடகங்களான ’மர்மதேசம் ரகசியம்’, ‘மாது ப்ளஸ் டூ’,’மதில்மேல் மாது’,’மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘ரிடர்ன் ஆஃப் கிரேசி தீவ்ஸ்’ ஆகிய நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்தார் சீனு.
இன்று அவரது திடீர் மறைவை ஒட்டி கிரேசி மோகன் வெளியிட்ட அறிக்கையில் ’கிட்டத்தட்ட 30 வருடங்களாக எங்களது நாடகக் குழுவில் பணியாற்றியவர் சீனு. இன்று காலை அவர் இறந்த செய்தி கேட்டு நெஞ்சு கனத்துக்கிடக்கிறது.
1979ல் கிரேசி குழுவுக்குள் வந்த எங்கள் ஒவ்வொருவரின் மனதுக்கும் மிகவும் நெருக்கமானவர். தனது அற்புதமான நடிப்பால் லட்சக்கணக்கானோரை கவலை மறந்து சிரிக்கவைத்தவர். அவரது ஆத்மா பூரண சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறோம்’ என்று அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.