தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'சூரரை போற்று' பட நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published : Mar 28, 2021, 08:11 PM IST
தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'சூரரை போற்று' பட நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சுருக்கம்

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவின் தாக்கம் இருக்காது என கருதப்பட்ட நிலையில், சூரரைப்போற்று பட நடிகருக்கு தடுப்பூசி போட்ட கொண்ட போதிலும் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.  

கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக தணிந்ததை நினைத்து மக்கள் சந்தோஷப்பட்டு நிலையில், மீண்டும் தன்னுடைய கொடூர முகத்தை ஒரு சில வாரங்களாக காட்டி வருகிறது. எனவே மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட வாய்ப்புள்ளதாகவும் ,சில தகவல்கள் பரவி வருகிறது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தற்போது தேர்தல் நேரம் என்பதால், கட்சி பொதுக் கூட்டங்களிலும்... தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக உரிய பாதுகாப்பை கையாள வேண்டுமென்றும், முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவின் தாக்கம் இருக்காது என கருதப்பட்ட நிலையில், சூரரைப்போற்று பட நடிகருக்கு தடுப்பூசி போட்ட கொண்ட போதிலும் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

மேலும் செய்திகள்: காதலி ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது..? விஷ்ணு விஷால் வெளியிட்ட தகவல்..!
 

பிரபல பாலிவுட் நடிகரான பரேஷ் ராவல் இந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூரரைப்போற்று' படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இவருக்கு 65 வயது ஆகும் நிலையில், சில தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். எனினும் இவருக்கு உடலில் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் சோதித்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகை அனுஷ்காவை கலங்க வைத்த பிரபல நடிகரின் மரணம்..!
 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... யாரும் எதிர்பாராத வண்ணம் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இந்தியாவில் முதல் கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 60 வயதை தாண்டியவர்கள் மற்றும் 45 வயது இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போட்ட பின்பும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சூரரை போற்று பட நடிகர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்