
கொரோனா 2வது அலைக்கு கே.வி.ஆனந்த், தாமிரா, பாண்டு, மாறன் என அடுத்தடுத்து திறமையான கலைஞர்களை திரையுலகம் பறிகொடுத்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று தமிழ் சினிமா மற்றொரு திறமையான நடிகரை இழந்தது. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, கபாலி, காலா, அசுரன் மற்றும் கடைசியாக விஜய் சேதுபதியுடன் லாபம் போன்ற திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்த நிதிஷ் வீரா நேற்று கொரோனா தொற்றால் காலமானார்.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த இவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ் வீரா, சென்னையில் தங்கி சினிமாவில் நடித்து வந்தார். இந்நிலையில் கொரானாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிதிஷ் வீரா உடலை அவரது குடும்பத்தினர் மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அமரர் ஊர்தி வாகனத்தில் அவரது உடல் சென்னையில் இருந்து மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நடிகர் நிதிஷ் வீராவிற்கு நந்தினி என்ற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சொந்த ஊருக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலைப் பார்த்து மகள்கள் மற்றும் மனைவி அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கதி கலங்க செய்தது. பிறகு அருகிலுள்ள பட்டிமேடு மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதோ அந்த வீடியோ...
"
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.