'கர்ணன்' படத்தை பார்த்து விட்டு தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய பாலிவுட் பட இயக்குனர்..!

Published : May 18, 2021, 07:42 PM IST
'கர்ணன்' படத்தை பார்த்து விட்டு தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய பாலிவுட் பட இயக்குனர்..!

சுருக்கம்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான, 'கர்ணன்' திரைப்படம் திரைப்படத்தை பார்த்த பாலிவுட் பட இயக்குனர், படத்தையும், அதில் நடித்த தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.   

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான, 'கர்ணன்' திரைப்படம் திரைப்படத்தை பார்த்த பாலிவுட் பட இயக்குனர், படத்தையும், அதில் நடித்த தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார். 

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் "கொடியன்குளம்" என்கிற கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் 'அசுரன்' படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும் தன்னுடைய வெறித்தனமான நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தி இருந்தார் தனுஷ்.

அதே போல்.. ஒவ்வொரு கதாபாத்திரமும், கர்ணன் வெற்றியின் மகுடத்திற்கு நவரத்தினங்கள் பொருந்தியது போல் பொருத்தமாக இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் நாயகி ரஜிஷா விஜயனுக்கு தொடர்ந்து தமிழில் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் வாய்ப்பை கை பற்றியுள்ளார்.

இந்த படம் கொரோனா இரண்டாவது அலை தலை தூக்கியபோது, 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்த போது வந்தாலும், வசூலில் கெத்து காட்டியது. மே 14 ஆம் தேதி, 'கர்ணன்' படம் ஓடிடியில் வெளியாகியுள்ளதால், திரையரங்கில் சென்று பார்க்க முடியாத பலர் ஓடிடியில் பார்த்து விட்டு, அவ்வப்போது தங்களுடைய கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் படக்குழுவினருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது பிரபல பாலிவுட் பட இயக்குனர் ஆனந்த் எல் ராய், கர்ணன் படத்தை பார்த்து விட்டு தாறுமாறாக படக்குழுவை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "OUTSTANDING & BRILLIANT இதை விட இந்த படத்தை எப்படி விவரிப்பது. உங்களுடைய எண்ணங்களை மிக அற்புதமாக திரையில் கொண்டு வந்திருந்தீர்கள். தனுஷ் நான் உங்களை ஒரு நடிகர் என்று மட்டுமே நினைத்தேன். நீங்கள் ஒரு மாயாஜாலம் செய்பவர் என வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!