
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், 1991 ஆம் ஆண்டு ' புது நெல்லு புது நாத்து' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் நெப்போலியன். நல்ல உயரமும் வில்லன் மாதிரி உடல் கட்டும் இருந்ததால் இவருக்கு சிறு வயதிலேயே குணசித்திர கதாபாத்திரமும், வில்லன் கதாபாத்திரமும் தான் முதல் முதலில் கிடைத்தது.
பின் 1994 ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறினார். இவர் ஹீரோவாக நடித்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற போதிலும், தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெப்போலியன் , தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாக உள்ள 'Devil's Night : Drawn of the nain rouge' என்கிற படத்தில் முதல் முறையாக நடிக்கிறார் நெப்போலியன். தற்போது அமெரிகாவில் வசித்து வரும் இவருக்கு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க நிறைய வாய்புகள் கிடைத்தும் ஒரு சில காரணத்தால் இத்தனை நாட்கள் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்தார். தற்போது நண்பரின் வற்புறுத்தலால் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
திரையுலகில் காலடி எடுத்து வைத்து, திரையுலகில் பல்வேறு விருதுகள், அரசியல் என அனைத்திலும் கால் பதித்து வெற்றி கண்ட இவர்... தற்போது ஹாலிவுட் திரையுலகில் அவருடைய அடையாளமான முறுக்கு மீசையுடன் களம் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.