இயக்குனர் மோகன் ஜி, 'ருத்ர தாண்டவம்' படத்தை தொடர்ந்து இயக்கும் 'பகாசூரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில், தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு பயணித்து வருபவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான, 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்', போன்ற படங்கள் வித்தியாசமான கதைக்களத்தோடு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படங்களை தொடர்ந்து தற்போது 'பகாசூரன்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார். மிக முக்கிய கதாபாத்திரத்தில், நட்டி நடித்துள்ளார். மேலும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது . இதில் இதுவரை பார்த்திடாத கெட்டப்பில் இயக்குனர் செல்வராகவன் கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் போட்டு கொண்டு, நெற்றியில் பட்டையோடு பக்தி மயமான கெட்டப்பில் தோன்றியிருந்தார். அவருக்கு பின்னால் பல பக்தர்கள், சாமி தரிசனம் செய்தபடியும், சில இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டிருப்பதும் போஸ்டரில் வெளியானது.
மேலும் செய்திகள்: நடிகர் விஜய் சேதுபதியின் உடன் பிறந்த சகோதரி ஜெயஸ்ரீயை யார் தெரியுமா? ஒரு தொழிலதிபரா.. பலரும் அறிந்திடாத தகவல்!
இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் செல்வராகவனை தொடர்ந்து, மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நட்டி நட்ராஜ் தோற்றம் இடம்பெற்றுள்ளது. நட்டியின் பின்புறத்தில் பல செய்தித்தாள்கள் ஒட்டப்பட்டுள்ளது. கேமரா மற்றும் லைட் முன்பு நட்டி எழுதிக் கொண்டிருப்பது போன்று வித்தியாசமான போஸ்டர் வெளியாகி 'பகாசுரன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
'பகாசூரன்' படத்தின் டீசர் நாளை காலை 10:10 மணிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த சி எஸ் சாம் இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக பாரூக் 'பகாசூரன்' மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் 'பகாசூரன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் செய்திகள்: ஸ்பெஷல் நாளில்... கையில் மதுவை வைத்துக்கொண்டு நிக்கியை கட்டி அணைத்து... ரொமான்டிக் ஹனி மூன் கொண்டாடும் ஆதி !
கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில், மூன்றே மாதத்தில் படத்தின் படப்பிடிப்பது முடித்து விட்டு தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை திரையில் கூறப்படாத வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளதாக கூறியுள்ளார் மோகன் ஜி. இந்த படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.