Karthi : தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் கார்த்தி, கோலிவுட்டில் தற்போது புது டிரெண்டை உருவாக்கி உள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் கார்த்தி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சூர்யா தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதற்காக படக்குழுவினர் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்து நன்றி தெரிவித்தார் சூர்யா.
தற்போது நடிகர் கார்த்தி கைவசம் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்... வேற லெவல் ட்ரெண்டா இருக்கே...அலங்கரா பொருளை ஆடையாக்கிய சாக்ஷி அகர்வால்...ஹாட் கிளிக்ஸ்
அதேபோல் சர்தார் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. அப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் கார்த்தி, கோலிவுட்டில் தற்போது புது டிரெண்டை உருவாக்கி உள்ளார். வழக்கமாக நடிகர்கள் பிறநடிகர்களின் படங்களுக்கு பாடல் பாடுவது என்பது சகஜமான ஒன்று தான். ஆனால் நடிகர் கார்த்தி, சர்வானந்த் மற்றும் அமலா நடிப்பில் உருவாகி உள்ள கணம் படத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளது மட்டுமின்றி, அப்படத்தை புரமோட் செய்யும் விதமாக அப்பாடலின் மியூசிக் வீடியோவிலும் நடித்துள்ளார். அவரின் பங்களிப்பால் அப்பாடலும் வைரலாகி உள்ளது. கார்த்தியின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதை மற்ற முன்னணி நடிகர்களும் பாலோ பண்ணுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... 4 ஆம் நிலை புற்றுநோயால் போராடும் KGF பட நடிகர்..! மருந்துக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் இத்தனை லட்சமா?