பா.ரஞ்சித்தை பாராட்டமாட்டேன்... நேரில் பார்த்தால் நடிகர் நாசர் இதை தான் செய்வாராம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 26, 2021, 5:14 PM IST
Highlights

பிரபல நடிகரான நாசர் ஓடிடி தளத்தில் சார்பட்டா பரம்பரை  படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் பா.ரஞ்சித்தை உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 1970ல் சென்னையில் நடந்த பாக்ஸிங் கலாச்சாரத்தை கண்முன் கொண்டு வந்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டருக்கு பதிலாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. வடசென்னையின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்துள்ளதாக படத்திற்கு வரவேற்பு குவிந்து வருகிறது. 

படத்தில் பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மாரியம்மாள், ரங்கன் வாத்தியார், பாக்கியம், வெற்றிச் செல்வன், டாடி, ராமன், டான்சிங் ரோஸ், வேம்புலி, தணிகை என ஒவ்வொரு பாத்திரமும் மக்கள் மனதில் நிற்கிறது. ஆர்யாவின் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய மைல்கல் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது. எப்போதும் தன்னுடைய படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பதிவு செய்யும் பா.ரஞ்சித், இந்த முறை விளையாட்டிற்குள் இருக்கும் சாதிய பிரச்சனைகளை காட்சிப்படுத்தியுள்ளார். 

தியேட்டரில் மட்டும் வெளியாகி இருந்தால் படத்தை கொண்டாடி தீர்த்திருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கப்படும் அளவிற்கு படம் வேற லெவலுக்கு உள்ளது. சோசியல் மீடியாவில் ரசிகர்களை விடவும் திரையுலகினர் பலரும் சார்ப்பட்டா பரம்பரை படத்தை கொண்டாடி வருகின்றனர். கோலிவுட் பிரபலங்கள் பலரும் பா.ரஞ்சித்தின் இயக்கம், ஆர்யாவின் அர்ப்பணிப்பு, பசுபதியின் நடிப்பு, டான்ஸிங் ரோஸ் உள்ளிட்ட கதாபாத்திர வடிவமைப்பு என பல விஷயங்களை பாராட்டி வருகின்றனர். 

அந்த வரிசையில் பிரபல நடிகரான நாசர் ஓடிடி தளத்தில் சார்பட்டா பரம்பரை  படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் பா.ரஞ்சித்தை உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளார். அவரே கைப்பட எழுதியுள்ள வாழ்த்து மடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், தம்பி ரஞ்சித், உன்ன நான் பாராட்டமாட்டேன். உன் கையைப் புடிச்சி ஒரு நூறு முத்தங்கள் கொடுத்து ‘நன்றி’ன்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எம் சமூகத்திற்கு கொடுத்ததற்கு’ என உணர்ச்சிப்பூர்வமாக வாழ்த்தியுள்ளார். 

click me!