நடிகர் மாதவனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்...! ரசிகர்கள் வாழ்த்து மழை..!

Published : Feb 19, 2021, 10:37 AM IST
நடிகர் மாதவனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்...! ரசிகர்கள் வாழ்த்து மழை..!

சுருக்கம்

தமிழில் ஆரம்பத்திலேயே கௌதம் மேனன் இயக்கிய 'மின்னலே', மணிரத்தினத்தின் 'அலைபாயுதே' போன்ற தரமான காதல் படங்களை நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் மாதவன். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் அதிக வரவேற்பு  இருந்தது.  

தமிழில் ஆரம்பத்திலேயே கௌதம் மேனன் இயக்கிய 'மின்னலே', மணிரத்தினத்தின் 'அலைபாயுதே' போன்ற தரமான காதல் படங்களை நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் மாதவன். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் அதிக வரவேற்பு  இருந்தது.

மேலும் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் மாதவன். அந்த வகையில் இவர் தமிழில் நடித்த 'இறுதிச்சுற்று', 'விக்ரம்வேதா' போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. தமிழைத் தொடர்ந்து ஹிந்தியிலும் செம பிசியான நடிகராக வலம் வரும் மாதவன் மாதவனுக்கு, தற்போது டி. ஒய் பாட்டில் என்கிற  பல்கலைக்கழகம் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இது குறித்து மாதவன் கூறுகையில் "கலைச்சேவையை பாராட்டி வழங்கப்பட்டுள்ள இதுபோன்ற மரியாதைகளை பணிவுடன் ஏற்பதாகவும், சவால் நிறைந்த புதிய படங்களை தேர்வு செய்து நடிப்பதை இது போன்ற பட்டங்கள் ஊக்கப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அறிந்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளம் மூலமாக தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என புதிய அவதாரம் எடுத்துள்ள மாதவன் ஆங்கிலம், இந்தி, தமிழ், உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வரும் இஸ்ரே விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.  நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு
மிகவும் வலி நிறைந்த நாட்கள்... இந்தியன் 3 ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த காஜல் அகர்வால்