அச்சு அசல் தளபதி போல் இருக்கும் டேவிட் வார்னர்..! 'மாஸ்டர்' விஜய்யாக மாறி கெத்து காட்டிய வீடியோ..!

Published : Feb 18, 2021, 07:45 PM ISTUpdated : Feb 18, 2021, 07:49 PM IST
அச்சு அசல் தளபதி போல் இருக்கும் டேவிட் வார்னர்..! 'மாஸ்டர்' விஜய்யாக மாறி கெத்து காட்டிய வீடியோ..!

சுருக்கம்

மாஸ்டர், சர்க்கார், என தளபதியின் தரமான படங்களில் உள்ள, சூப்பர் ஹிட் சீன்களில் வார்னர் தளபதி விஜய்யாக மாறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருபவர் டேவிட் வார்னர். கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரபல இந்தி பாடல்களுக்கு மகள்கள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் தாறுமாறு வைரலானது. ஐபிஎல் போட்டியின் போது ஐதராபாத் அணிக்கு கேப்டனாக விளையாடி வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடியும், பாகுபலி பட வசனங்களை பேசியும் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்தது. 

இந்தி, தெலுங்கு ஹீரோக்களின் முகத்திற்கு பதிலாக ஃபேஸ் ஆப் மூலமாக தன்னுடைய முகத்தை வைத்து வார்னர் வெளியிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கம். சமீபத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகவே வார்னர் மாறி வார்னர் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் விரலாகியது.

இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யாக மாறி கலக்கியுள்ளார். மாஸ்டர், சர்க்கார், என தளபதியின் தரமான படங்களில் உள்ள, சூப்பர் ஹிட் சீன்களில் வார்னர் தளபதி விஜய்யாக மாறியுள்ளார். ஏற்கனவே, ரசிகர்கள் மத்தியில் வார்னரின் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோவிற்கும் எக்க சக்க லைக்குகள் குவிந்து வருகிறது.

அந்த வீடியோ இதோ... 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தங்கமயிலின் அதிரடி முடிவு! - அம்மாவை நம்பினால் வேலைக்காது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா; நீதி கிடைக்குமா?