தனுஷ் தந்தை வாங்கிய கடன்..! ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும்? நீதி மன்றம் அதிரடி கேள்வி !

By manimegalai aFirst Published Feb 18, 2021, 7:15 PM IST
Highlights

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பெற்ற 65 லட்ச ரூபாய் கடனை திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தந்துவிடுவார் என எழுதிய கடிதத்திற்கு,  இது எப்படி ரஜினியை கட்டுப்படுத்தும்? என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.
 

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பெற்ற 65 லட்ச ரூபாய் கடனை திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தந்துவிடுவார் என எழுதிய கடிதத்திற்கு,  இது எப்படி ரஜினியை கட்டுப்படுத்தும்? என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவருடைய தந்தையும், தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா சினிமா பைனான்சியர்முகுந்த் சந்த் போத்ரா என்பவரிடம் ரூபாய் 65 லட்சம் கடன் பெற்றிருந்தார். இவர் வாங்கிய கடன் தொகையை ஒருவேளை கொடுக்க தவறி விட்டால்,  ரஜினி அந்தக் கடனை தருவார் என கஸ்தூரிராஜா முகுந்த் சந்த் போத்விற்க்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்... நடிகர் ரஜினிகாந்த்  பெயரை தவறாக கஸ்தூரி ராஜா பயன்படுத்தியதாகவும், எதிராக நடவடிக்கை எடுக்கும் எடுக்கும்படியும், ரஜினிகாந்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் முகுந்த் சந்த் போத்ரா.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக உரியவர் தான் வழக்கு தொடர வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவிட முடியாது என, இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  மேலும் விளம்பரத்திற்காக இவ்வழக்கு தொடர்த்ததாக  மனுதாரருக்கு ரூ 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் முகுந்த் சந்த் போத்ரா.  தற்போது அவர் இறந்து விட்டதால் இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த வழக்கு, இன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா வாங்கிய கடன் தொகை 65 லட்சம் ரூபாயை மீண்டும் கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.  மேலும் பணத்தைத் திருப்பி தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம் ஜினியை எப்படி கட்டுப்படுத்த முடியும் என அதிரடி கேள்வியையும் முன்வைத்துள்ளனர். 

click me!