
பிரபல நடிகர் கார்த்தி, கீழே தவறி விழுந்து அடி பட்டதில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவது, அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
1981 ஆம் ஆண்டு, 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நவரச நாயகன் கார்த்திக்கை தொடர்ந்து, அவரது மகன் கெளதம் கார்த்திக்கும் இளம் நடிகராக அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கார்த்திக் தன்னுடைய வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் கார்த்திக் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த அதே இடத்தில் தான் தற்போதும் எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இவருக்கு அடிபட்ட நிலையில், தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும் அவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் முழு ஓய்வில் இருக்க கூறி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.