அடுத்தடுத்து வந்த உடல்நல பிரச்சனைகள்..! தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்..!

Published : Jul 29, 2021, 10:36 AM ISTUpdated : Jul 29, 2021, 10:37 AM IST
அடுத்தடுத்து வந்த உடல்நல பிரச்சனைகள்..! தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்..!

சுருக்கம்

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த், அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல், சின்னத்திரை வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த், அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல், சின்னத்திரை வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வாணி ராணி, அரசி, சந்திரகுமாரி, உள்ளிட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வேணு அரவிந்த். நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதராகவும் பார்க்க கூடியவர். தற்போது இவர் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா ஸ்டேஜில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இவரது ரசிகர்களையும், சின்னத்திரை வட்டாரத்தையும் சோகமடைய செய்துள்ளது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்ட இவர்,  பின்பு நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்பு மூளையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து , அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள். உடனேயே கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

சின்னத்திரையில் எந்த ஒரு கிசுகிசுவில் சிக்காத ஜென்டில் மேனாக வலம் வந்த வேணு அரவிந்த்துக்கு தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர் விரைவில் உடல்நலம் பெறவேண்டும் என, இவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ள பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். வேணு அரவிந்த் சின்னத்திரை ஹீரோவாக மட்டும் இல்லாமல் 10 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?