முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி..!

Published : Jun 11, 2021, 04:57 PM IST
முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி..!

சுருக்கம்

கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு கொள்வது அவசியம் என தமிழக அரசும், சுகாதர துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், பிரபல நடிகர் கார்த்தி  முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு கொள்வது அவசியம் என தமிழக அரசும், சுகாதர துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், பிரபல நடிகர் கார்த்தி  முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜூஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த வைரல் போட்டோ!
 

கொரோனாவின் முதல் அலை தமிழகத்தில், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள் மட்டுமே என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். எனவே அடுத்தடுத்து நடிகர் நடிகைகளில், தங்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு, அந்த புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். 

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூரி, நடிகை கீர்த்தி சுரேஷ், குக் வித் கோமாளி கனி, பவித்ரா லட்சுமி என வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது மட்டும் இன்றி, மற்றவர்களும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: இது தச்சு போட்டதா... போட்டுட்டு தச்சதா?... உடலை ஒட்டியிருக்கும் பயங்கர டைட் உடையில் ரம்யா பாண்டியன்..!
 

மேலும் சத்யராஜ், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சிவகுமார் ஆகியோர் தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசி குறித்தும், கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் முறை குறித்தும், தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் பிரபல நடிகரும், பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனுமான கார்த்தி... தன்னுடைய முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். இதனை தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் அவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?