
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. வில்லன், கதாநாயகன், குணசித்திர வேடம், என எது கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார்.
தற்போது இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி, விடுதலை, இடம் பொருள் ஏவல், விக்ரம், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார், காந்தி டாக்ஸ் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”. என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனும், விஜய்சேதுபதியும் தற்போது விக்ரம் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.