Actor Jiiva : தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகர் தான் ஜீவா. அண்மையில் இவர் திரையுலகில் களமிறங்கிய 21 ஆண்டு விழா நடந்தது.
குழந்தை நட்சத்திரமாக ஓரிரு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனது தந்தை ஆர்பி சௌத்ரி அவர்களின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான "ஆசை ஆசையாய்" திரைப்படத்தின் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு ஹீரோவாக தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகர் தான் ஜீவா என்கின்ற அமர் சௌதிரி.
அதன் பிறகு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான "ராம்" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. அதன்பின் ஜீவா நடிப்பில் வெளியான ஈ, கற்றது தமிழ் மற்றும் சிவா மனசுல சக்தி உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் பன்முக திறமை கொண்ட ஒரு நடிகர் என்பதை எடுத்துக் காட்டியது.
கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் இவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் தற்பொழுது தனது புதிய முன் முயற்சி ஒன்றை அவர் துவங்கியுள்ளார். "Deaf Frogs" என்கின்ற நிறுவனத்தை அவர் தற்பொழுது துவங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது குறும்படங்களையும், பாடல் மற்றும் நடன திறமையையும் இளைஞர்கள் வெளிக்காட்ட ஒரு நல்ல தளமாக அமையவிருக்கிறது ஜீவாவின் "Deaf Frogs".
இந்த புதிய நிறுவனத்தின் துவக்க விழாவில் நடிகர் ஜீவா அவர்களுடைய நண்பர்கள் ஜெயம் ரவி, ஆர்யா, மிர்ச்சி சிவா, விஜய் ஆண்டனி, ஜித்தன் ரமேஷ் மற்றும் தொகுப்பாளர் ஜெகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஜீவாவை வாழ்த்தினார். மேலும் இந்த நிறுவனம் குறித்து பேசிய நடிகர் ஜீவா எனக்கு நடிப்பில் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான்.
https://t.co/yUBOEhaLBS
Stay tuned for more updates !!!
ஒரு முறை அவர் கூறிய ஒரு குட்டி கதையில் காது கேட்காத தவளை குறித்து ஒரு அருமையான கதையை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் தான் எனது இந்த புதிய முன்னெடுப்பிற்கு நான் "Deaf Frogs" என்று பெயரிட்டுள்ளேன். மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை செவியில் போட்டுக் கொள்ளாமல் தன்னுடைய வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இளைஞர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.