பிறந்தநாளில் ட்விட்டரில் இணைந்த மூத்த நடிகர் ஜனகராஜ்..! வாழ்த்து கூறி வரவேற்ற ரசிகர்கள்..!

Published : May 21, 2021, 12:40 PM IST
பிறந்தநாளில் ட்விட்டரில் இணைந்த மூத்த நடிகர் ஜனகராஜ்..! வாழ்த்து கூறி வரவேற்ற ரசிகர்கள்..!

சுருக்கம்

தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பிரபல மூத்த காமெடிய நடிகர் ஜனகராஜ், ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பற்றும் பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை, கூறி ட்விட்டர் உலகிற்கு வரவேற்று வருகிறார்கள்.  

தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பிரபல மூத்த காமெடிய நடிகர் ஜனகராஜ், ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பற்றும் பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை, கூறி ட்விட்டர் உலகிற்கு வரவேற்று வருகிறார்கள்.

80 மற்றும் 90 களில் கவுண்டமணி - செந்தில் ஆகிய காமெடி நடிகர்களுக்கு நிகராக, தன்னுடைய காமெடி பேச்சாலும், உடல் மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தவர் ஜனகராஜ். குறிப்பாக  'என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா....', மற்றும் 'தங்கச்சிய நாய் கடுச்சிடுச்சி பா' போன்ற டயலாக்குகள் இன்று வரை, ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. 

தமிழில் சினிமாவில் காமெடி நடிகராக மட்டும் இன்றி, குணச்சித்திர நடிகராகவும் சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். சில காலம் திரையுலகில் இருந்து விலகியே இருந்த இவர், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான '96 'படத்தின் மூலம் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும் கமல்ஹாசனின் சகோதரர், சாருஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள... 'தா தா 87 ' படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் ஜனகராஜ்... தன்னுடைய 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ட்விட்டர் கணக்கில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் எனது பிறந்தநாளில் எனது ட்விட்டர் பயணத்தை இன்று தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! என கூறியுள்ளார். மேலும் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ள இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வரவேற்று வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!