இது ஒரு சதவீதம் கூட வைரஸை தடுக்காது..! இதுவே தீர்வாகும் என நம்புகிறேன்! தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்!

By manimegalai aFirst Published May 21, 2021, 11:27 AM IST
Highlights

ஊரடங்கு உத்தரவு அறிவித்த பின்னரும், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
 

ஊரடங்கு உத்தரவு அறிவித்த பின்னரும், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

கடந்த மே 10 ஆம் தேதி தமிழகத்தில், தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு போடப்பட்டது. ஆரம்பத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தற்போது அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பி வைத்து வருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து சுமார் 10 நாட்களுக்கு மேல் ஆகியும், கொரோனாவால் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடு இல்லை. எனவே, அனைவருக்கும் தடுப்பூசி, போடும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.  இந்த நிலையில் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு போட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது.... "முழு ஊரடங்கிற்குப் பின்னும் கொரோனா குறையாமல் தொடர, மக்கள் துணியால் ஆன முகக்கவசம் மட்டுமே அணிவதை முக்கிய காரணமாக பார்க்கிறேன். துணி கவசம் 1% கூட வைரஸ் பரவலை தடுக்காது. சர்ஜிகல் மாஸ்க்-ஐ கட்டாயமாக்கலே இதற்கான தீர்வாக முடியும் என நம்புகிறேன். விலைக் கட்டுப்பாடும் அவசியம்". என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் என்.95 மாஸ்குகள் மற்றும் சர்ஜிக்கல் மாஸ்குகள் 95% வரை கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்றும் ஆனால் துணியால் செய்யப்பட்ட மாஸ்குக்கள் மற்றும் ஸ்பாஞ்ச் மாஸ்குக்கள் கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்தாது என்றும் அந்த மாஸ்க் அணிவது பயன் அற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு ஊரடங்கிற்குப் பின்னும் குறையாமல் தொடர, மக்கள் துணியால் ஆன முகக்கவசம் மட்டுமே அணிவதை முக்கிய காரணமாக பார்க்கிறேன். துணி கவசம் 1% கூட வைரஸ் பரவலை தடுக்காது. சர்ஜிகல் மாஸ்க்-ஐ கட்டாயமாக்கலே இதற்கான தீர்வாக முடியும் என நம்புகிறேன். விலைக் கட்டுப்பாடும் அவசியம். pic.twitter.com/w7UicoTaDL

— SR Prabhu (@prabhu_sr)

click me!