மனைவியுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் சூரி..! வைரலாகும் வீடியோ..

Published : May 21, 2021, 10:39 AM IST
மனைவியுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் சூரி..! வைரலாகும் வீடியோ..

சுருக்கம்

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில், அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என, மருத்துவர்கள், சுகாதார துறையினர் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல நடிகர் சூரி, தன்னுடைய மனைவியுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.   

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில், அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என, மருத்துவர்கள், சுகாதார துறையினர் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல நடிகர் சூரி, தன்னுடைய மனைவியுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனாவை தடுக்கும் பேராயுதமாக விளங்கி வருகிறது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள். 18 வயதை கடந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என, மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபலங்கள் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அண்ணாத்தை' படப்பிடிப்பை முடித்து கொண்டு வந்த ஓரிரு நாட்களில் தன்னுடைய வீட்டிலேயே கடுப்பூசி போட்டு கொண்டார் . இதுகுறித்த புகைப்படத்தை, ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா வெளியிட்டிருந்தார்.

மேலும் பல பிரபலங்கள் அடுத்தடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டு வரும் நிலையில், பிரபல காமெடி நடிகர் சூரி, தன்னுடைய மனைவியுடன் சென்று... வீட்டின் பக்கத்துல் இருக்கும் மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி கொண்டுகொண்டதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... "இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க'. என தெரிவித்துள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொஞ்ச நேரத்துல சாவு பயத்த காட்டிய கார்த்திக்; மீண்டும் கம்பி எண்ண சென்ற மூவர் கூட்டணி!
சின்னத்திரை வரலாற்றில் அதிக TRP-ஐ வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?