பிரபல நடிகர் இளவரசு... நீதிபதி கண்டித்ததை தொடர்ந்து, பொய் சொல்லியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு, தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தில், முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தி.நகர் காவல் நிலையத்தில் பிரபல குணசித்ர நடிகர் இளவரசு மனு தாக்கல் ஒன்றை செய்தார். பல ஆண்டுகள் ஆகியும் இந்த விசாரணை முடிவுக்கு வராத நிலையில், சமீபத்தில் இந்த வழக்கை நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து நடிகர் இளவரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் இளவரசு, கடந்த மாதம் (டிசம்பர்) 12ஆம் தேதி, காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக காவல் துறை சார்பில், கண்காணிப்பு கேமரா கட்சியுடன் கூடிய ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் எப்போது? ஷூட்டிங் பேக் அப் முதல்... பாடல்கள் வரை வெளியான தரமான அப்டேட்!
இதனை மறுத்த, இளவரசு... 13-ஆம் தேதி தான் ஆஜர் ஆகி வாக்கு மூலம் அளித்தேன் என்றும், டிசம்பர் 12-ஆம் தேதி, ஒரு படப்பிடிப்பில் இருந்ததாகவும் பொய் சொல்லி இருந்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் தரப்பில் விசாரித்த போது, 12-ஆம் தேதி படப்பிடிப்பில் இளவரசு கலந்து கொண்டது உண்மை தான் என்றும், ஆனால்... படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், அவர் அன்றே காவல் நிலையத்தில் ஆஜராகை வாக்குமூலம் அளித்தது உறுதிசெய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, இளவரசனுக்கு கண்டனம் தெரிவித்த நீதி மன்றம். எதற்காகவும் மாற்றி பேசவோ அல்லது பொய் செல்லவோ வேண்டாம். உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்வோம்... இல்லையாயெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என எச்சரித்ததை தொடர்ந்து, இன்று நடந்த விசாரணையில் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.