
தனது உடல் நிலை குறித்து தவறான செய்தியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் நடிகர் கவுண்டமணி புகார் அளித்துள்ளார்.
நடிகர் கவுண்டமணி தமிழ் திரையுலகில் பிரபலமான காமெடி நடிகர். திரையுலகில் 1965-ம் ஆண்டுமுதல் நடித்து வருகிறார். பதினாறு வயதினிலே படத்துக்குப்பின் பிரபலமானார். 1980-களில் கொடி கட்டிப்பறந்தார். 55 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் வலம் வரும் கவுண்டமணி 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் இன்றைக்கும் ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அடிக்கடி இவரது உடல் நிலைக்குறித்து தவறான செய்திகள் பரப்பப்படும். பின்னர் மறுப்பு வெளியிடப்படும். கவுண்டமணி கடைசியாக 2016-ம் ஆண்டு வாய்மை என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், கவுண்டமணி உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக யூடியூப் சேனல்களில் தொடர்ந்து தகவல்கள் பரபரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தியை பார்த்த கவுண்டணி அதிர்ச்சியடைந்து கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கவுண்டமணியின் வழக்கறிஞர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கவுண்டமணி உடல்நிலை குறித்து தவறான தகவல் வெளியிட்டு வரும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து முடக்க வேண்டும் என என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.