4 நடிகைகள் எடுத்த முடிவால் ஆடிப்போன நடிகர் சங்கம்..! 'அம்மா' வேண்டாம் ஒதுங்கிய திலீப்...!

 
Published : Jun 29, 2018, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
4 நடிகைகள் எடுத்த முடிவால் ஆடிப்போன நடிகர் சங்கம்..! 'அம்மா' வேண்டாம் ஒதுங்கிய திலீப்...!

சுருக்கம்

actor dhileep not intrested to re join malayala nadigarsangam

கடந்த வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதி பிரபல மலையாள நடிகையை 4 பேர் காரில் கடத்தி, பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் பெயரும் அடிப்பட்டது. இரண்டு கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த சம்பவத்தில் திலீப்பிற்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் போலீசார் இவரை சந்தேகத்தின் அடிப்படியில் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள திரையுலகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது.  

மலையாள திரையுலகை சேர்ந்த சில நடிகர்கள் திலீப்பிற்கு ஆதரவு தெரிவித்தாலும், இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முன்னணி நடிகைகள் போர் கொடி தூக்கினர். இதனால் நடிகர்கள் அவசரமாக கூடி, நடிகர் திலீபை மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான நடிகையின் வழக்கில் இதுவரை திலீப் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து திலீப்பிடம் எந்த விளக்கம் மலையாள நடிகர் சங்கம் கேட்க வில்லை என கூறப்படுகிறது. 

அம்மாவின் புதிய பொதுச்செயலாளர் இடவேள பாபு, திலீபை சங்கத்திலிருந்து நீக்கியதில் விதிமீறல் உள்ளது என்றும். அதனாலேயே அவர் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று கூறப்படுகிறது. 

நடிகர் மோகன்லால் கடந்த சமீபத்தில் தான் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், திலீப் மறுபடியும் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதனால் மிகவும் கோபம் அடைந்துள்ள பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை பாவனா, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கள், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட 4 நடிகைகள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பின்வாங்கிய திலீப்:

மலையாள நடிகைகளின் இந்த எதிர்பாராத அறிவிப்பால், ஆடி போனது மலையாள திரையுலகம். இதைதொடர்ந்து தற்போதைய நடிகர் சங்க தலைவர் மோகன் லால் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தது. 

இந்நிலையில் தற்போது நடிகர் திலீப், திரும்பவும் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் சேர விருப்பம் இல்லை என அறிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!