
இந்த மாபெரும் வெற்றிக்கு கதையின் ஓட்டம் ஒரு காரணம் என்றால், இசை புயலின் இசை இன்னொரு காரணம் என்றால் அது மிகையல்ல.
தனுஷ் மற்றும் ஏ ஆர் ரகுமான் இணைப்பில் உருவான ஒரு மிகச் சிறந்த படம் மரியான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் மீண்டும் தானே இயக்கி நடிக்க இருக்கின்ற அவருடைய ஐம்பதாவது திரைப்படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது, இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
இந்நிலையில் D50 மட்டுமல்லாமல், தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் மேலும் இரு திரைப்படங்களுக்கு ரகுமான் இசையமைக்க விற்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் அவர் மீண்டும் நடிக்கும் Tere Ishk Mein படத்திற்கும் ரகுமான் அவர்கள் தான் இசையமைக்கவுள்ளார்.
வெகு நாள் கழித்து ஒரு Meet Up.. ரம்யா கிருஷ்ணனை ஆசையோடு வரவேற்ற அமைச்சர் ரோஜா - வைரலாகும் வீடியோ!
அதேபோல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ள தனுஷின் ஒரு படத்திற்கும் ரகுமான் தான் இசையமைக்க உள்ளார். ஆகவே ஒரு பான் இந்திய அளவில் தனுஷ் மற்றும் ரகுமான் இணைப்பில் படங்கள் உருவாகவுள்ளது இருவருடைய ரசிகர்களை மகிழ்ச்சில் ஆழ்த்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் குறித்து அடுத்த அப்டேட்டாக இந்த படத்தின் டீசர் வருகிற ஜூலை மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.