கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டை டார்கெட் செய்யும் கொரோனா... நடிகர் சிரஞ்சீவிக்கு தொற்று பாதிப்பு உறுதி

Ganesh A   | Asianet News
Published : Jan 26, 2022, 10:40 AM IST
கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டை டார்கெட் செய்யும் கொரோனா... நடிகர் சிரஞ்சீவிக்கு தொற்று பாதிப்பு உறுதி

சுருக்கம்

லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் சிரஞ்சீவி. 

கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால், திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், சமீப காலமாக திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் அருண் விஜய், சதய்ராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரும், நடிகைகள் மீனா, குஷ்பு, திரிஷா, ஷெரின் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர்.

இதுவரை தமிழ் நடிகர்களை தொடர்ந்து தாக்கி வந்த கொரோனா தற்போது டோலிவுட் பக்கம் சென்றுள்ளது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் மகேஷ் பாபுவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகர் சிரஞ்சீவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். 

லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் சிரஞ்சீவி. மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்
மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!