மத்திய அரசின் உயரிய பத்ம ஸ்ரீ விருது பெறும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி

Kanmani P   | Asianet News
Published : Jan 25, 2022, 09:10 PM IST
மத்திய அரசின் உயரிய பத்ம ஸ்ரீ விருது பெறும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி

சுருக்கம்

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கக்கப்படவுள்ளது..

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தமும் 128 விருதுகள் அறிவிக்கப்படுள்ளது..அதன்படி, 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 34 பெண்கள் மற்றும் 10 வெளிநாட்டவருக்கு அறிவிக்கப்படுள்ளது..இந்த விருதுகளை மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குவார்.

தமிழகத்தை பொறுத்தவரை கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கும்..கல்வித்துறைக்கு ஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியன், ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை பாடகர் ballesh bhajantri, கலைத்துறையை சார்ந்த . R Muthukannammal ,கர்நாடக இசை கலைஞர்  A K C Natarajan, சமூக சேவைக்கான விருது Shri S Damodaran, மருத்துவத்துறை சார்ந்த விருதுக்கு Dr. Veeraswamy Seshiah உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளார்... 

சென்ற ஆண்டு கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மறைந்த குஜராத் முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேல் உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 10 பேர் உள்பட மொத்தம் 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை