pandian stores hema dancing video : ''சும்மா சுர்ருனு'' ஆட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா (ஹேமா)..

Kanmani P   | Asianet News
Published : Jan 25, 2022, 10:06 PM IST
pandian stores hema   dancing video : ''சும்மா சுர்ருனு'' ஆட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா (ஹேமா)..

சுருக்கம்

pandian stores hema   dancing video : பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா.. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து வெளியான 'சும்மா சுர்ருனு' பாடலுக்கு செம குத்து குத்தும் வீடியோ வெளியாகியுள்ளது...

விஜய் டிவியில் இப்போது பிரபலமாய் போய்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிக்கர ஹேமா ராஜ்குமார் . பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடிக்கும் மீனா வின் நிஜ பெயர் ஹேமா ராஜ்குமார்.இவருடைய வேறு பெயர் ஹேமா இல்லைனா கயலுனு சொல்லுவாங்கலாம்.ஹேமா ராஜ்குமார் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19தாம் தேதி மயிலாடுதுறையில் பிறந்தார்.

ஹேமா மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது இடைநிலை கல்விப் படிப்பை முடித்தார். இவர் மயிலாடுதுறையில் ஏ.வி.சி கல்லூரியில் mca என்ற பட்டப் படிப்பை முடித்தார். ஹேமா ராஜ்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது.இவரின் கணவர் பெயர் சதிஷ்.இவருக்கு ஆகஸ்ட் 27 அன்று திருமணம் ஆனது.இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ஹேமா ராஜ்குமார் தனது 22 வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினர்.இவர் பெப்பர்ஸ் டியிவில் anchor செய்தார்.2015 தாம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற தமிழ் திரைபடத்தில் ஹேமா ராஜ்குமார் அறிமுகமானார். பின்னர் ஆறாது சினம்” என்ற தமிழ் படத்தில் சிறந்த நடிகர்களான அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா போன்ற நடிகர்களுடன் விமலா என்ற வேடத்தில் ஹேமா ராஜ்குமார் நடித்தார்.

2014 ஆம் ஆண்டு ஒளிபரப்புசெய்யப்பட்ட “ஆஃபீஸ்” என்ற சீரியலில் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகனார் ஹேமா ராஜ்குமார்.இவர் ராதிகா என்ற வேடத்தில் நடித்தார்.இந்த சீரியல் ஆனது ராம்விநாயக் இயக்கிய கே.ஜே கணேஷ் என்பவரால் தயாரிக்கப்பட்டது.கார்த்திக் ராஜ், சித்தார்த், ஸ்ருதி ராஜ்,சங்கர பாண்டியன்,சியாம் ஆகியோருடம் இதில் நடித்திருந்தனர்.

சன் டீவியில் பொன்னுஞ்சல், தென்றல், குல தெய்வம் மற்றும் விதி, ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மெல்ல திறந்தது கதவு, விஜய் டிவியில் களத்து வீடு, சின்னத்தம்பி, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா வேடத்தில் ஹேமா ராஜ் குமார் பணியாற்றி வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வேடத்தில் நடித்ததால் 2021 ஆம் ஆண்டு விஜய் டெலி அவார்டில் பெஸ்ட் சப்போர்டிங் actress என்ற விருது ஹேமா ராஜ்குமாருக்கு கிடைத்தது.

தற்போது எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து வெளியான சும்மா சுருனு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ள ஹேமா.. அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறார்...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ