ட்விட்டரில் இணைந்த பிரபல நடிகர் சார்லி..?

Published : Jun 11, 2021, 05:26 PM ISTUpdated : Jun 11, 2021, 05:38 PM IST
ட்விட்டரில் இணைந்த பிரபல நடிகர் சார்லி..?

சுருக்கம்

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட நடிகர் சார்லி, ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுவதை தொடர்ந்து,  இவரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வரவேற்றுள்ளனர்.  

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட நடிகர் சார்லி, ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுவதை தொடர்ந்து,  இவரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வரவேற்றுள்ளனர்.

80 களில் இருந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் சார்லி. குறிப்பாக நடிகர் விஜய்யுடன் 'காதலுக்கு மரியாதை', 'கண்ணுக்குள் நிலவு', அஜித்துடன் 'அமர்க்களம்', போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

இதுவரை 567 படங்களில் நடித்துள்ள நடிகர் சாறிலி, தற்போது, பிழை,  தீர்ப்புகள் திருத்தப்படலாம், வால்டர், ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.  இதில் தீர்த்து தீர்ப்புகள் திருத்தப்படலாம் சத்யராஜ் நடிக்கும் படம். 'வால்டர்' திரைப்படத்தில்  சத்யராஜ் மகன் சிபிராஜுடன் நடித்திருந்தார். மேலும் சமீப காலமாக, மிகவும் அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருபவர்.

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நிலையிலும் இதுவரை, எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இல்லாமல் இருந்த சார்லி ட்விட்டரில் இணைந்ததாக அவர் பதிவிட்டது போலவே போலி ஐடி ஒன்றை உருவாக்கியுள்ளார்.  இவரை  நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர், சார்லியுடன் நடித்த போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வரவேற்றுள்ள போதிலும், உண்மையிலேயே இது அவரது உண்மையான ட்விட்டர் கணக்கு இல்லை என்றும், இந்த கணக்கு 2020 ஆம் ஆண்டு துவங்க பட்ட போலி கணக்கு என்றும் நெட்டிசன்கள் ஆதாரத்தோடு தெரிவித்துள்ளனர். எனவே வழக்கம் போல் பல பேக் ஐடி வலம் வருவது போல், இவரது பெயரிலும் ஒரு போலி ஐடி உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
ரேஸில் இருந்து விலகிய வா வாத்தியார், லாக்டவுன்... டிசம்பர் 12 தியேட்டர் & OTT-ல் இத்தனை படங்கள் ரிலீஸா?