சத்தம் இல்லாமல் நடிகர் சார்லி செய்த புதிய சாதனை!

Published : Jun 28, 2019, 06:46 PM IST
சத்தம் இல்லாமல் நடிகர் சார்லி செய்த புதிய சாதனை!

சுருக்கம்

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட சார்லி, 80 களில் இருந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.  

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட சார்லி, 80 களில் இருந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

குறிப்பாக நடிகர் விஜயுடன் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அஜித்துடன் அமர்க்களம், போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது இவர் சத்தமே இல்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளார். 

இதுவரை 567 படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது, பிழை,  தீர்ப்புகள் திருத்தப்படலாம், வால்டர், ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.  இதில் தீர்த்து தீர்ப்புகள் திருத்தப்படலாம் சத்யராஜ் நடிக்கும் படம். வால்டர் திரைப்படத்தில்  சத்யராஜ் மகன் சிபிராஜுடன் நடித்து வருகிறார்.

பிழை படத்தில், இதுவரை நடித்திராத கெட்டப்பில், அதாவது தலைக்கு டை அடிக்காமல், மேக்அப் போடாமல் நடித்து வருவதாக பிரபல நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Shivathmika : டிரான்ஸ்பரென்ட் சேலையில் கவர்ச்சி சிலையாக இளசுகளை ஈர்க்கும் சிவாத்மிகா ராஜசேகர்.. வேற லெவல் போட்டோஸ்!!
Pradeep Ranganathan: லவ் இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் பிறகு மாஸ் சர்ப்ரைஸ் ரெடி! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் படம்!