நடிகரின் அந்தரங்க உறுப்பில் இருந்து வெளியேறிய மாதவிடாய் மற்றும் விந்து! வெட்டி எடுத்தாச்சு.. கதறும் பிரபலம்!

Published : Aug 12, 2023, 08:03 PM ISTUpdated : Aug 12, 2023, 08:16 PM IST
நடிகரின் அந்தரங்க உறுப்பில் இருந்து வெளியேறிய மாதவிடாய் மற்றும் விந்து! வெட்டி எடுத்தாச்சு.. கதறும் பிரபலம்!

சுருக்கம்

நடிகர், தொகுப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக கலைஞராக இருக்கும் சக்கரவர்த்தி என்பவர் தன்னுடைய ஒரே உடலில் ஆணாகவும் - பெண்ணாகவும் வாழ்ந்து வருவதால் அனுபவித்து வரும் துயரமான வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.  

சக்கரவர்த்தி தற்போது தமிழக அரசால் இடை பாலினத்தவர் என்ற சான்றிதழை பெற்றுள்ள நிலையில், இவர் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள விஷயம் பலரது மனதை கலங்க வைத்துள்ளது.

சக்கரவர்த்திக்கு பத்து வயது இருக்கும் போது, அவருடைய அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர், இது குறித்து தன்னுடைய அம்மாவிடம் தெரிவித்துள்ளார்.  இவருடைய அம்மாவும் காயம் பட்டதால் இப்படி நடந்திருக்கலாம் என அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து மாத மாதம் இவருக்கு இது போன்ற பிரச்சனை ஏற்பட்டதால், இதுகுறித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று சக்கரவர்த்தியை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் கூறிய விஷயம் இவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடிக்கும் அசோக் செல்வன்! அடுத்த மாதம் டும் டும் டும்.. திருமண தேதி வெளியானது!

அதாவது லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் அரிதான பிரச்சனையால் சக்கரவர்த்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆணாக இருந்தாலும் அவருக்கு கர்ப்பப்பை உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் ஒரு ஆண்மகனின் பருவ வயது வந்த பின் ஏற்படும் மாற்றங்களும் இவருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது, விந்துவும் இவருடைய அந்தரங்க உறுப்பில் இருந்து வெளியேறி உள்ளது. அதற்கு பின்பு தான் அவருடைய உடலில் பெண்களுக்கு இருப்பது போல் கர்ப்பப்பை மட்டும் இல்லை ஒரு ஆணுக்கான உணர்வுகள் உள்ளதையும் தெரிந்து கொண்டார்.

இவர் திருமண வயதை எட்டியபோது, ஆண் - பெண் என இவருக்கான உணர்வுகளோடு இடை பாலினமாக வாழ்வதால், இவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர். மேலும் மாதவிடாய் பிரச்சனை மற்றும் சிறுநீர் ஆகியவை ஆணுறுப்பில் இருந்து வெளியேறுவதால், தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சக்ரவர்த்தி வலியால் துடித்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் அறிவுரையின் பெயரில் இவரின் உடலில் இருந்து கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

ரம்யா பாண்டியன் தங்கையோடு நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணமா? சமூக வலைத்தளத்தில் சூடாக்கிய தகவல்!

புற்றுநோய் பாதிப்பு வருவதற்கான அபாயம் உள்ளதாக கூறப்படவே,  ஆணுறுப்பையும் ஆபரேஷன் செய்து வெட்டி எடுத்து விட்டார்களாம். தன்னை போல் இடை பாலினமாக பிறந்து, பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களுக்கு, ஆதரவாக பல்வேறு சமூக விழிப்புணர்வு வீடியோக்களை போட்டு வருகிறார் .

முன்பு ஒரு நடிகராகவும், தொகுப்பாளராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் இருந்த இவருக்கு... இவரை பற்றிய தகவல் தெரிந்தவுடன் பலர் வாய்ப்பு தர மறுகிறார்களாம். திறமை இருந்தும் வீட்டிற்குள்ளேயே முடக்கி இருக்கும் இவர், தற்போது வறுமையில் வாடி வருவதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவருடைய நிலையை அறிந்த ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருவதோடு, இதுபோன்ற வினோத பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சக்கரவர்த்திக்கு தமிழக அரசு சார்பில் ஏதேனும் உதவி கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்