
நடிகை பாவனாவிற்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் இன்று காலை திருச்சூரில் திருமணம் நடைபெற்றது.
சிறந்த துணை நடிகை
பாவனா முதலில் மலையாளத்தில் "நம்மல்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததற்காக, ஏசியாநெட் ஃபிலிம் அவார்ட்ஸ் சார்பாக சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைக்கப்பெற்றது.
தமிழில் அறிமுகம்
அதன் பிறகு தமிழில் "சித்திரம் பேசுதடி" படம் அறிமுகமானார் பாவனா.தொடர்ந்து "ஜெயம்கொண்டான்", "தீபாவளி", "அசல்" உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து வந்தார்.
பாலியல் வன்கொடுமை
இவர்கள் இருவரும் திருமணத்தை எண்ணி கனவு கண்டு கொண்டிருக்கும் போது அந்த துயர் சம்பவம் நடந்தது. பிப்ரவரி 17 ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்பி கொண்டிருந்த பாவனாவை ஒரு கும்பல் கடத்தியது. அதன்பின்னர், அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வீடியோ எடுத்தது.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, பாவனாவின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திலீப்
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான திலீப் இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.பழி வாங்கும் நோக்கில் சக நடிகையை, ஒரு முன்னணி நடிகர் அதுவும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற நடிகர் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்தது சக நடிக, நடிகைகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் திலிப் மீது இருந்த மரியாதையை குறைத்தது.
திருமணம்
இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, பாவனா தனது காதலரை இன்று காலை கரம் பிடித்தார்.இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து நிச்சயிக்கப்பட்ட படி திருமணம் இன்று காலை பாவனாவின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாவனாவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பாவனாவிற்கு ப்ரியங்கா சோப்ரா உள்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.