விரைவில் உண்மை வெளிவரும்…முதல்முறையாக மவுனம் கலைத்தார் நடிகை பாவனா...

 
Published : Jul 14, 2017, 06:46 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
விரைவில் உண்மை வெளிவரும்…முதல்முறையாக மவுனம் கலைத்தார் நடிகை பாவனா...

சுருக்கம்

actor bavana statement in facebook

பாலியல் பலாத்கார வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த பாதிக்கப்பட்ட நடிகை பாவனா, விரைவில் உண்மை வௌிவரும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடத்தி பலாத்காரம்

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் கொச்சியில் இருந்து படப்பிடிப்பு முடித்து காரில் திரும்பினார். அப்போது,  ஒரு கும்பல் அவர் காரை வழிமறித்து, அவரை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை வீடியோவாகவும் எடுத்தனர். இது குறித்து பாவனா அளித்த புகாரின அடிப்படையில், பல்சர் சுனி உள்ளிட்ட 6  பேரை போலீசார் கைது செய்தனர்.

திலீப் கைது

இதில் பல்சர் சுனியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பின், நடிகை பாவனா கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்த விவகாரத்தில், மலையாள நடிகர்திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை பாவனாவா தனிப்பட்ட காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கில் திலிப், பல்சர் சுனியுடன் சேர்ந்து இந்த செயலை செய்தது தெரியவந்தது. இதற்கான பண உதவியும் சுனிக்கு,  திலிப்செய்துள்ளார். இதையடுத்து தகுந்த ஆதாரங்களுடன் நடிகர் திலிப்பை கடந்த 10-ந்தேதிபோலீசார் கைது செய்தனர்.

அதிர்ச்சி

நடிகை பாவனா பாதிக்கப்பட்ட விஷயத்தில் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் திலிப், உண்ணாவிரதம்,  போராட்டங்களிலும் கலந்துகொண்டார். அவர் திடீர் திருப்பமாக கைது செய்யப்பட்டது அறிந்து நடிகை பாவனா தான் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

மவுனம் கலைத்தார்

ஆனால் அதன்பின், கருத்து ஏதும் தெரிவிக்காமல் நடிகை பாவனா இருந்தார். இந்நிலையில், நேற்று தனது நிலைப்பாடு குறித்து முதல்முறையாக நடிகை பாவனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

முரண்பாடுகள்

நான் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதில் என்னுடைய சகோதரர் அனுப்பையும் சிக்க வைக்க சதி நடக்கிறது. ஆனால், விரைவில் உண்மை வௌிவரும். எனக்கும் அந்த நடிகருக்கும்(திலீப்) இடையே தனிப்பட்ட முரண்பாடுகள் இருந்ததால், எங்களின் நட்பு முடிவுக்கு வந்தது.

யாரையும் பழிவாங்கவில்லை

எனது தனிப்பட்ட பகை காரணமாக, பிரச்சினை காரணமாக, யாரையும் பழிவாங்க இந்த வழக்கில் சிக்க வைக்க நினைக்கவில்லை. எனக்கும் அந்த நடிகருக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொடர்பாக மோதல் ஏற்பட்டது என ஊடகங்களில் செய்தி வருவது ஆதாரம் இல்லாதது. எனக்கும் அந்த நடிகருக்கும் இடையே ரியல்எஸ்ட்டேட் அல்லது பணம் கொடுக்கல் வாங்கள் தொடர்பாக எந்த உறவும் இல்லை.

உண்மை வெளிவரும்

இந்த வழக்கில் நடிகருக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் போலீசிடம் சிக்கி இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இப்போது அவர் போலீசின் விசாரணைக்குள் இருக்கிறார். என் சகோதரரையும் சிக்க வைக்க அந்த நடிகர் முயற்சித்தால் உண்மை விரைவில் வௌிவரும். இந்த குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் தப்பிக்க முடியாது. அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பெயரை வெளியிட்ட நடிகர் கைது?

நடிகை பாவனா பலாத்கார வழக்கில் கேரளாவில், நடிகையின் பெயரைவௌியிடாமல் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. இதில் நடிகர் அஜு வர்கீஸ் என்பவர், பேஸ்புக்கில் நடிகை பாவனாவின் பெயரை குறிப்பட்டு பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது  போலீசார் ஐ.பி.சி. பிரிவு 228ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், எந்நேரமும் அஜூ வர்கீசும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையே தனது செயலுக்கு வர்கீஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரிலீஸ் ஆனபோது யாரும் பார்க்கல, இப்போ புகழ்கிறார்கள்'; கமல் படம் பற்றி ஆதங்கப்பட்ட ஸ்ருதிஹாசன்
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? விஜய்க்கு செக் வைத்த மலேசியா அரசு..!