
பாடலாசிரியர் சினேகன், நமிதா, காயத்ரி ரகுராம் என எப்போதும் யாரை பழிவாங்கலாம் என யோசித்துக்கொண்டே இருக்கும் கும்பல் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஓவியா... சினேகனிடம் நீங்கள் மூன்றாயிரம் பாடலுக்கு மேல் எழுதியுள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்... நீங்கள் எழுதிய பாடலில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? என கேட்டார்.
அதற்கு சினேகன், ராம் படத்தில் வரும் ஆராரிராரோ... என்ற பாடலை சொல்கிறார், மேலும் இந்த பாடலை நான் தனிமையில் இருக்கும்போது கேட்டால் தன்னையே மறந்து அழுதுவிடுவேன் என கூறுகிறார்... இதற்கு நமிதாவும்... காயத்ரியும் ஆமாம் அந்த பாடலை கேட்டால் தங்களுக்கும் அழுகை வரும் என கூறியதற்கு, ஓவியா என்னுடைய அம்மா சில நாட்களுக்கு முன் கேன்சரால் இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு பல முறை நான் இந்த பாடலை கேட்டிருக்கிறேன் எனக்கு அழுகை வரவில்லை என கூறி செம நோஸ் கட் கொடுத்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.