மீண்டும் ரசிகருக்கு “பளார்” விட்ட தெலுங்கு கேப்டன் பாலகிருஷ்ணா!

 
Published : Oct 03, 2017, 06:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
மீண்டும் ரசிகருக்கு “பளார்” விட்ட தெலுங்கு கேப்டன் பாலகிருஷ்ணா!

சுருக்கம்

Actor Balakrishna Again slaps fan

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது ரசிகர் ஒருவரை பொது இடத்தில் வைத்து  அடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதுபோல் ஏற்கனவே ரசிகர் ஒருவரை அடித்தும், படப்பிடிப்பில் தனது ஷீ கயிற்றை சரியாகக் கட்டாத உதவியாளரை அடித்தும் பாலகிருஷ்ணா சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கு நடிகர் பாலகிருஷ்ணா(வயது57), ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராவர். அனந்தபுர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்காக ஊர் ஊராக, வீடுவீடாக  பிரசாரத்தில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணா ஈடுபட்டு இருந்தார்.

இந்நிலையில், பிராசரத்தின் போது, ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க தீவிரமாக முயற்சி செய்தார். அப்போது பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்கும்முயற்சியில் அவர் மீது மோதியுள்ளார். 

இதனால், வெறுப்படைந்த பாலகிருஷ்ணா அந்த ரசிகரின் கன்னத்தில் அடித்தார். இதை படம்பிடித்துக்கொண்டு இருந்த ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இப்போது இந்த காட்சி வைரலாகப் பரவி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நந்தியால் பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காக பாலகிருஷ்ணா சென்ற போது, செல்பி எடுக்க ஒரு ரசிகர் முயற்சித்தபோது, ஆத்திரத்தில் அந்த ரசிகர் கன்னத்தில் அறைந்தார் இந்த சம்பவத்தையும் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் தீவிரமாகப் பரவியது.

ஜெய் சிம்ஹா திரைப்பட படப்படிப்பின்போது, தனது ஷீ கயிற்றை சரியாகக் கட்டாத உதவியாளரை பாலகிருஷ்ணா அடித்து சர்ச்சைக்குள்ளார்.

கடந்த 2004ம்ஆண்டு, திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். அந்த விசாரணையின் முடிவில் தன்னை தற்காக்கவே சுட்டேன் என்று பாலகிருஷ்ணா தெரிவித்தார். 

நீதிமன்ற விசாரணையில் அந்த தயாரிப்பாளர் பல்டி அடித்து, பாலகிருஷ்ணா தன்னைச் சுடவில்லை எனத் தெரிவித்ததையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!